×

மே விடுமுறை தினம் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம்

சென்னை : மே 1ம் தேதி (இன்று) அரசு விடுமுறை தினம் என்பதால் மெட்ரோ ரயில் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கப்படுகிறது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில் சேவை இயங்கும். காலை 8 மணி முதல் நண்பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.

மேலும் காலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும், நண்பகல் 11 மணியிலிருந்து மாலை 5 வரையிலும், இரவு 8 லிருந்து 10 வரையில் 7 நிமிடத்திற்கு ஒருமுறையும், இரவு 10 லிருந்து இரவு 11 மணி வரையில் 15 நிமிடத்திற்கு ஒருமுறையும் மெட்ரோ ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

The post மே விடுமுறை தினம் சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இன்று இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை சேப்பாக்கத்தில்...